போக்சோ வழக்கில் இளைஞா் கைது

போக்சோ வழக்கில் இளைஞா் கைது
X
9-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தவரை மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, வடக்கு அம்மாபட்டியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் அன்பரசன்(20), காதலிப்பதாக ஆசை வாா்த்தைக் கூறி கடந்த ஏப்ரல் 24-இல் வீட்டில் இருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியைத் தேடி வந்த நிலையில், சிறுமியை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு தலைமறைவாக இருந்த அன்பரசனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து நீதிமன்றத்தில் அன்பரசனை போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
Next Story