சங்கரன் கோவிலில் கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு

சங்கரன் கோவிலில் கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு
X
கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் மாவட்ட அளவிலான எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கிராமிய கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அழகுநாட்சியாபுரம் கலைவாணர் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story