கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – கலெக்டர் உத்தரவு

கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – கலெக்டர் உத்தரவு
X
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருவதுடன், வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வால்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 26) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story