வைத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகவேள்வி

வைத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகவேள்வி
X
வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் வரும் 27- ஆம் தேதி கலங்காமற் காத்தருளும் விநாயக பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்திற்கு வருகின்ற ஜுலை மாதம் 02- ஆம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக இவ்வாலயத்தில் உள்ள மேற்கு புறம் பார்த்த கலங்காமற் காத்தருளும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு வருகிற 27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7-30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தொடக்க நிகழ்வாக இன்று காலை ஹோமம், மஹா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை சர்வசாதகம் சிவஸ்ரீ திப்பிராஜபுரம் டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் (சுரேஷ்), ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ. குமார் சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆலய கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, அறங்காவலர் ஆர். சிவராமகிருஷ்ணன், மீனாராம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ வைத்தீவரர் நற்பணி மன்றம் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story