உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நீதிபதிகள் பங்கேற்பு

X
ஜெயங்கொண்டம் ஜூன்.26- தமிழ் நாடு மாநிலசட்டப் பணிகள் ஆணை குழுவின் வழிகாட்டுதல் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவு படியும் யோகா தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா கலை பயிற்சி சார்பு நீதிபதி லதா தலைமையில் நீதிமன்ற ஊழியர்களுக்கும் , வழக்கறிஞர்களுக்கும் மற்றும் நீதிபதி்களுக்கும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யோகாசனங்களை பயிற்றுவிக்க மனவளக்கலை மன்ற பேராசிரியர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் பழனிமுத்து, பாலு , மோகன், பழனிராஜ், கலிய மூர்த்தி, .பாண்டியன், குமாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகா கலையை வாழ்வியலாக கொண்ட தமிழர் பண்பாட்டின் சிறப்பைக் கூறி கற்றுக் கொடுக்கப்பட்ட ஆசனங்களின் முக்கியத்துவத்தையும் அதனுடைய பயன்களையும் பற்றி விரிவாக விளக்கி கூறினர். இப் பயிற்சியில் சார்பு நீதிபதி முனைவர் லதா, சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதிகள் .மகேஸ்வர் , அனிதா கிறிஸ்டி , குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் ,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கண்ணதாசன், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் , நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் சட்டத்தன்னார்வலர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி .வரதராஜன் தலைமையில் செந்துறை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளித்து அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார்
Next Story

