ஆற்காடு அருகே பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி பகுதியில் அமைந்துள்ள இராசாகோடு நகராட்சி தொடக்கப் பள்ளியில் SDPI கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சையத் கரீம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

