கன்னியாகுமரியில் கடல் பாதுகாப்பு ஒத்திகை

X
'சாகர் கவாச்' கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை கடலோரப் பகுதிகளில் நடத்தப்படும் பாதுகாப்புப் பயிற்சியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நிரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு கடலோர காவல்படை போலீசார் அதிநவீன படகுகளில் சென்று பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று மற்றும் இன்றும் நடைபெறும் கடல் பாதுகாப்பின் போது, கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான இரண்டு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழு காவல்துறை மற்றும் காவல்துறை இணைந்து காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தப் பயிற்சியை நடத்துகின்றன. இப்ப பயிற்சியின் முக்கிய நோக்கம் : கடல் வழியாக ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பதும், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் முதன்மை நோக்கமாகும்.
Next Story

