கெடிலம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

X
உளுந்துார்பேட்டை அடுத்த அருங்குறுக்கை, கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பூங்கொடி, போலீஸ் பாதுகாப்புடன் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட, பயிர்களை ஜே.சி.பி., இயந்திரங்கள் கொண்டு நேற்று அகற்றினார்.
Next Story

