கண்ணதாசன் பிறந்தநாள் விழா

X
சின்னசேலம், கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை சார்பில், கவியரசு கண்ணதாசன் 98 வது பிறந்தநாள் விழா நடந்தது. பேரவை தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரகாஷ், ராஜா, நாகராஜன், அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.பேரவை தலைவர் சத்தியநாராயணன் கண்ணதாசன் படத்தை திறந்து வைத்து மலர் துாவி வாழ்த்தினார். புலவர்கள் சண்முக பிச்சபிள்ளை, ராஜா ஆகியோர் 'வாழ்த்துப்பா' பாடினர். நிர்வாகிகள் ஆறுமுகம், கருணாநிதி, கலியமூர்த்தி, கண்ணன், நடராஜன், மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரவை நிறுவனர் கவிதைத்தம்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆலோசகர் ராமசாமி நன்றி கூறினார்.
Next Story

