வேன், பைக் மோதல் வாலிபர் பலி

X
உளுந்துார்பேட்டை தாலுகா எ.குறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் நரேஷ்குமார், 28; கூலித் தொழிலாளி.மங்கலம்பேட்டையில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி நேற்று காலை 9:00 மணிக்கு, பைக்கில் காட்டுநெமிலி அருகே சென்றார். அப்போது இவரது பைக்கும் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதே பகுதி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து வேன் டிரைவர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த பாரதிநகரை சேர்ந்த ஹரிஹரன், 52; என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
Next Story

