நாகர்கோவில் :பூட்டிய வீட்டில் கரும் புகை

நாகர்கோவில் :பூட்டிய வீட்டில்  கரும் புகை
X
பதறிய மக்கள்
குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் உள்ள ராயன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மத்தியாஸ் 70, அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் வீட்டில் பணி செய்யும் பெண்ணை அனுப்பிவிட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளனர். 10 மணி அளவில் இவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியுள்ளது தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மின் விநியோகத்தை தடை செய்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு புகை வெளியேறச் செய்தனர். விசாரணையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story