சூளகிரி அருகே வளா்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்.

சூளகிரி அருகே வளா்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்.
X
சூளகிரி அருகே வளா்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, சாமனப்பள்ளி மற்றும் சூளகிரி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக 8 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, செயற்பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா்கள் சுப்ரமணி, சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஷ், உதவி பொறியாளா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
Next Story