வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்
X
போராட்டம்
கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பேரணி மற்றும் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவமணி, இந்திரகுமார், நாகராஜன், அருள்ஜோதி, செம்மலை முன்னிலை வகித்தனர். பிரபாகர் வரவேற்றார். இதில், மந்தைவெளியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story