கோவை: தமிழ் பெயர் பலகை வைக்க முயன்றவர்கள் கைது

கோவை: தமிழ் பெயர் பலகை வைக்க முயன்றவர்கள் கைது
X
ரயில் பெட்டிகளில் தமிழ் பெயர் பலகை இல்லாததை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எர்ணாகுளம் – பெங்களூரு இண்டர்சிட்டி ரயில் தமிழ்நாட்டை கடந்தும் இயக்கப்படும் நிலையில், ரயில் பெட்டிகளில் தமிழ் பெயர் பலகை இல்லாததை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என முழக்கமிட்ட அவர்கள், ரயில் வந்தவுடன் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story