மத்திய உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
X
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை ஒருமையில் பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பாக புகார் மனு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை ஒருமையில் பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேற்று முன்தினம் மடைபெற்ற நிகழ்வில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை முட்டாள் என்று குறிப்பிட்டார். இதற்கு தமிழக பாஜக வினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட பாஜக வினர் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனுகொடுத்தனர். இது தொடர்பாக முத்தமிழ்செல்வன் கூறும்போது, நிமுக எம்.பி. ஆ.ராசா தொடர்ந்து இதுபோன்று ஒருமையில் பேசுவது தொடர்கிறது. அதிமுக பொதுச்செயலாளரை ஒருமையில் பேசினார்.தற்போது மத்திய உள்துறை அமித்ஷா அவர்களை முட்டாள் என ஒருமையில் பேசியுள்ளார். எனவே, திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். அப்போது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story