உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
X
வேடசந்தூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சரவணகுமார் , ராமசாமி , ஜாபர்சாதிக், ஜஸ்டின் , விஜயகுமார் மற்றும் செல்லத்துரை ஆகியோர் கொண்ட குழுவினர் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 13 கிலோ இருப்பது கண்டறியப்பட்டு 2 கடைகளுக்கு தலா ரூ.50,000, மூன்று கடைகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்து 5 கடைகளையும் சீல் வைத்தனர்.
Next Story