ராமநாதபுரம் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்மாணவர்களுக்கு வலியுறுத்தல்

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 86 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கமுதி கோட்டைமேட்டில் நடந்த கட்சி அலுவலகம் திறப்பு, கொடியேற்று விழாவிற்கு தேசிய செயலாளரும், மாநில பொருளாளருமான ஸ்ரீவைகுண்டம்சுரேஷ் தேவர் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி அமைப்பு செயலாளர் சப்பாணி முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார். கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, அபிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநில இளைஞரணி சார்பில் பள்ளி மாணவ} மாணவியர் 86 பேருக்கு விலை இல்லா நோட்டுகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு செயல்படுத்தியுள்ள காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உயர்கல்வி சிறப்பு கல்வி உதவி தொகை திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட கல்விக்கான சிறப்பு திட்டங்களை பயன்படுத்தி கிராமபுற மாணவர்கள் நன்றாக படித்து, கல்வியில் உயர்ந்து, அனைத்து துறைகளிலும் சாதித்து, தன் குடும்பம், கிராமம், மாவட்டம், மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாநில இளைஞர் அணி அமைப்பு செயலாளர் சப்பாணி முருகன் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கமுதி ஒன்றிய தலைவர் திருக்குமரன், ஒன்றிய செயலாளர் இருளாண்டி, இளைஞரணி செயலாளர் சித்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இளையமுனீஸ்வரன், மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் சுபஸ்ரீமணி, மாவட்ட துணைச் செயலாளர் முருகன் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

