ஆட்சியர் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை விழிப்புணர்வு உறுதிமொழி பேரணி கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மைதானத்தில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் கொடிய சேர்த்து துவக்கி வைத்தனர். இதில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் காவல்துறையினர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது ஒன்று கூடி வாருங்கள் போதையை ஒழிப்போம் போதை தன்னிலை மறக்க தானே வழியை தேடும் சபதம் ஏற்போம் புத்தியைக் கொடுக்கும் பாதையே ஒழிப்போம் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு பாதை ஒழிப்பு உருவாக்குவோம். போதை அது சாவின் பாதை போதையில் நீ வீதியில் உனது குடும்பம். போன்றவை தடுப்போம். இதுபோன்ற போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 161 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 181 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் வைத்திருந்த 37.217 கிலோ கஞ்சா மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் சம்பந்தமாக இந்தாண்டு இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் வைத்திருந்த 4444.731 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்று மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
Next Story