ஆணி வெப்பத்திற்காக பந்தகால் நடு விழா

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.365 நாட்களும் விழா நடைபெறும் சிறப்பு உடைய இத்தளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாத தெப்ப உற்சவம் 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தெப்ப திருவிழா அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான கொடியேற்ற விழா 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தெப்பம் கட்டும் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் இன்று காலை நடைபெற்றது.மன்னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் தீச்சிதர்கள் வேத மந்திரங்கள் கூற பந்தல் கால்களுக்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் பூசப்பட்டு நவதானியங்கள் தெளித்து பந்தல்கால் ஊன்றப்பட்டது. விழாவில் வர்த்தக சங்க தலைவர் ஆர் வி ஆனந்த் செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயசெல்வன், கௌரவ தலைவர் எஸ் எம் டி கருணாநிதி, முன்னாள் பொருளாளர் பிரபாகரன். நகர மன்ற உறுப்பினர் சிவசங்கர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story

