போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
X
ஒட்டன்சத்திரம் காவல்துறை சார்பாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல்துறை சார்பாக டிஎஸ்பி. கார்த்திகேயன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் மற்றும் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சக்தி கலை கல்லூரி மாணவிகள் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் முக்கிய சாலைகளின் வழியாக பேரணி நடைபெற்றபோது போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் சென்றனர்.
Next Story