புகழூர்-நகராட்சி பகுதியில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது

புகழூர்-நகராட்சி பகுதியில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது
புகழூர்-நகராட்சி பகுதியில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி பகுதிகளில்தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து 17.86 லட்சம் மதிப்பீட்டில் வடிவேலம்பாளையம் பைபாஸ் முதல் கோவில் நாணப்பரப்பு வரை தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கும், இதேபோல ரூபாய் 4.86 லட்சம் மதிப்பீட்டில் எழில் நகர் மூன்றாவது தெருவில் தார் சாலை புதுப்பித்தல் பணிக்கும் , ரூபாய் 4.74லட்சம் மதிப்பீட்டில் ஓனவாக்கால் மேடு முதல் தெருவில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
Next Story