திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கைது!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கைது!
X
கொடுத்த கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு அறிவாள் வெட்டு ஓட்டப்பிடராம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த எம்.சி.சண்முகையா. அவரது பெயரை கையில் பச்சைகுத்தும் அளவுக்கு அவரது தீவிர ஆதரவாளர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த ஓட்டப்பிடாரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பார் பொன். கற்பகராஜ், இவர் பாலஜெகதீஷ் என்பவரிடம் ரூ 50,000 பணம் பெற்றிருந்த நிலையில் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள 30 ஆயிரம் பணத்தை பால ஜெகதீசன் அவரது நண்பருடன் சென்று பொன் கற்பகராஜிடம் கேட்டபோது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பொன் கற்பகராஜ் அரிவாளைக்கு கொண்டு இருவரையும் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்கற்பகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story