திமுக மாவட்ட பொறுப்பாளர் பிறந்த தினத்தை ஒட்டி குழந்தைக்கு தங்க மோதிரம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி பிறந்த நாளை ஒட்டி 25ஆம் தேதிதிருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா சௌந்தர்ராஜன் தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சிதிருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் நடேசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், மகேஸ்வரி, ராஜா, அண்ணாமலை, மாதேஸ்வரன், செல்வி ராஜவேல், ராதா சேகர், மனோன்மணி சரவண முருகன் ஆகியோர் உள்ளிட்ட திமுகவினர், மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story



