கரூரில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
கரூரில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா,அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி வடக்கு பிரதட்சணம் சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, பேருந்து நிலையம், ஜவஹர் பஜார் வழியாக சென்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் அரசு கலைக் கல்லூரி, தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story






