ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி
X
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர் ஜூன்.26- ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26 ம் தேதி போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் இராசமூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார். மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை கூறியவாறு கல்லூரியிலிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தனர். காவல்துறையினர் பேரணிக்கு பாதுகாப்பு அளித்ததோடு, மாணவர்களுக்கு அறிவுறைகளையும், உறுதிமொழியும் வாசித்தனர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் வடிவேலன், முனைவர் பவானி மற்றும் கல்லூரி அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story