அரியலூர் அருகே மின் கணக்கீடு இயந்திரம் பொருத்த லஞ்சம்:மின் ஊழியர் கைது

அரியலூர் அருகே மின் கணக்கீடு இயந்திரம் பொருத்த லஞ்சம்:மின் ஊழியர் கைது
X
அரியலூர் அருகே மின் கணக்கீடு இயந்திரம் பொருத்த லஞ்சம்:மின் ஊழியர் கைது செய்தனர்.
அரியலூர், ஜூன் 26 - : அரியலூர் அருகே புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம் பொருத்துவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர்,தனது புதிய வீட்டுக்கு மின் கணக்கீடு இயந்திரம்(மீட்டர் பாக்ஸ்) பொருத்துவதற்கு, தேளூர் துணை மின் நிலைய வணிக உதவியாளர் மு.சாமிநாதன்(46) என்பவரை அண்மையில் அணுகிய போது, அவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.500 பணத் தாளை பெற்றுக் கொண்ட வீரமுத்து, அதனை மின் வணிக உதவியாளர் சாமிநாதனிடம் வியாழக்கிழமை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான காவல் துறையினர், சாமிநாதனை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Next Story