விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவு படி அமீனா ஜப்தி செய்தார்.

X
சாத்தூரில் விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவு படி அமீனா ஜப்தி செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி பேருந்தில் டிரைவராக பணி புரிந்து வந்தார் இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கோவில்பட்டியில் இருந்து வேலை முடிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சின்ன ஓடைப் பட்டிக்கு சென்ற போது சின்ன ஓடைப் பட்டி விளக்கு அருகே கனகராஜ் சென்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அரசு பேருந்து மோதியதில் பலியான கனகராஜின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு கொடுத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 01.08.2024ல் அரசு பேருந்து மோதிய விபத்தில் பலியான கனகராஜின் குடும்பத் திற்கு 21 லட்சம் இழப்பீடாக வழங்க சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சாலை விபத்தில் பலியான கனகராஜுன் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இழப்பீடு தொகையை வழங்காத மதுரை மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் 7.5% வட்டியுடன் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த காலத்திற்குள் இழப்பீடு தொகையை வழங்காததால் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் அரசு பேருந்தை ஜப்தி செய்ய ஜீன் 6ம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு படி நீதிமன்ற அலுவலர் மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்தை சாத்தூரில் வைத்து ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை பாதி வழியில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
Next Story

