சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு. ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு நல்ல குடிமக்கள் தேவை. ஆனால் சமீப காலங்களாக போதையின் மீதுபொதுமக்கள் அதீத கவனத்தின் ஈர்ப்பால் பல்வேறு குற்ற செயல்களும் , சமுதாய சீர்கேடுகளும் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கும் , பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் ஜூன் மாதம் 12ஆம் தேதியிலிருந்து ஜூன் 26 ஆம் தேதி வரை இரண்டு வார காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை கலாச்சாரத்திற்கு எதிராக அனைவரும் ஒரு சேர கைநீட்டி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள்,மாணாக்கர்கள்,தொண்டு நிறுவனங்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு போதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
Next Story