சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சத்திரத்தில் மினி மாரத்தான் போட்டி...

X
Rasipuram King 24x7 |26 Jun 2025 7:57 PM ISTசர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சத்திரத்தில் மினி மாரத்தான் போட்டி...
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சத்திரத்தில் மினி மாரத்தான் போட்டி... மாரத்தான் போட்டியை காவல் ஆய்வாளர் கோமதி கொடி அசைத்து துவக்கி வைத்த நிலையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓடி விழிப்புணர்வு... சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் பொதுமக்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில் மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது.போட்டியை புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி கோமதி, அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாரத்தான் போட்டியானது AK. சமுத்திரம் பகுதியில் இருந்து தொடங்கி கொழிஞ்சிபட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாரத்தான் போட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சமுதாயதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி ஏற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் கோமதி அவர்கள் கோப்பைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்..
Next Story
