போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பேச்சு, கட்டுரை போட்டிகள்

X
Komarapalayam King 24x7 |26 Jun 2025 8:29 PM ISTகுமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போதை ஒழிப்பு தினத்தையொட்டி, அரசு கலை அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி மற்றும் தமிழ் சிந்தனை பேரவை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. தாசில்தார் சிவகுமார், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி, தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் உள்பட பலர் பேரணியை துவக்கி வைத்தனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புனர்வு தொடர்பாக பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவமணி பேரணியில் பங்கேற்ற மாணவ, மானவியர்களிடையே, n விழிப்புணர்வு குறித்து பேசினார். பேரணியில் பங்கேற்ற, கல்லூரி மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் வந்தனர். ராஜம் தியேட்டர் முன்பு தொடங்கிய பேரணி, சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று தாலுக்கா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
Next Story
