ஆலங்குளம் பேரூராட்சித் தலைவரின் கணவா் ஆலங்குளத்தில் சாலை மறியல்

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவரின் கணவா் ஆலங்குளத்தில் சாலை மறியல்
X
பேரூராட்சித் தலைவரின் கணவா் ஆலங்குளத்தில் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சித் தலைவரின் கணவா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டாா். திருநெல்வேலி - தென்காசி சாலை ஆலங்குளத்தில் சாலையோரம் வாருகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முறையான குழாய்கள் அமைக்காமல் சிறிய அளவில் குழாய் அமைத்து பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு சென்ற ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதாவின் கணவா் மோகன்லால், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் அருணாசலம் ஆகியோா் பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையில் நடுவில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஒதுங்கி சென்றன. இத்தகவலறிந்த ஆலங்குளம் காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
Next Story