ஜெயங்கொண்டத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

X
அரியலூர், ஜூன்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் பஸ் நிறுத்தம் அருகே கொட்டப்பட்ட நாள்பட்ட குப்பையில் நாய்கள் மற்றும் பன்றிகள் கிளறி துர்நாற்றம் வீசி வருவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்தியவாறே சென்று வருகின்றனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

