கோவை: ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் கள ஆய்வு கூட்டம் !

கோவை: ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் கள ஆய்வு கூட்டம் !
X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் சரவணசுந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசுத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பற்றி ஆலோசனை நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் தங்கள் கோரிக்கைகள், பிரச்சனைகள் குறித்து மனுக்கள் வழங்கினர். முன்னதாக நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வாணன், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ஏற்பட்டுள்ள வசதி குறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். குடியிருப்புகளில் தண்ணீர் பிரச்சனை மற்றும் 2,000 பேர் வீடுகள், பட்டா நிலம் கோரியுள்ளதை ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என்றார். பஞ்சமி நிலங்களைப் பற்றிய பிரச்சனைகள் பற்றி தனியாக விசாரணை நடைபெற்று வருவதையும், சில நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் ஊதியப் பிரச்சனைக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Next Story