அத்துமீறிய இளைஞர் - அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள்

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை பகுதியில் ஆபத்தை உணராமல் பாதுகாப்பு கம்பி வேலியில் நுழைந்து ரீல்ஸ் எடுத்த இளைஞரை வனத்துறையினர் தேடிப் பிடித்தனர். பாண்டிச்சேரியை சேர்ந்த சுற்றுலாப் பயணி அஸ்வந்த் தடை செய்யப்பட்ட கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுத்தார். வனத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அபராதம் விதித்து அந்த இளைஞருக்கு வனத்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story

