தென்காசியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

X
தென்காசி மாவட்டம் தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் தலைமையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார், இப்பேரணியில் தப்பாட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியானது பள்ளியில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
Next Story

