பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள்

பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள்
X
திட்டங்கள்
மாவட்டத்தில் அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை அலுவலர்கள் உறுதி செய்ய கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மலையரசன் எம்.பி., தலைமை தாங்கினார்.கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். ரவிக்குமார் எம்.பி., மணிகண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டம், தேசிய நலக்குழுமம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கேலோ இந்தியா, ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள், செம்மைப்படுத்துதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
Next Story