அரசு மருத்துவ கல்லூரியில் அடையாளம் தெரியாத பிணம்

அரசு மருத்துவ கல்லூரியில் அடையாளம் தெரியாத பிணம்
X
குமரியை சேர்ந்தவரா?
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 நாள்களுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்த தகவல் தெரிந்தால் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப். 18 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நபர் ஜூன் 14 ஆம் தேதி உயிரிழந்தார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க நிலையில், மெலிந்த உடலும், வலது கை மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட நிலையிலும் காணப்பட்ட அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவர் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவரை குறித்த தகவல் தெரிந்தால் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தை 0471-2222222 என்ற எண்ணிலோ அல்லது காவல் நிலைய ஆய்வாளரை 94979 47112 என்ற எண்ணிலும், உதவி ஆய்வாளரை 94979 80123 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story