ராமநாதபுரத்தில் தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு.

தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் தேமுதிக மாவட்ட செயலாளார் சிங்கை ஜின்னா வேண்டுகோள்
ராமநாதபுரம் தனியார் மஹாலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் நடைபெற்றது. இதில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பூத் கமிட்டி அமைத்து இதன் மூலம் வாக்காளர்களை கவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பள்ளிகளில் நடைபெரும் காலை உணவுதிட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்கள் இல்லாத நிலையில் புதிய தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொறுப்புக் குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.குமார், மாநில தேர்தல் பணிக்கு உறுப்பினர் அழகர்சாமி, மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அரவிந்தன், நகர் செயலாளர் ஏ.எஸ்.பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முனியசாமி, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story