ராமநாதபுரம் கொலை முயற்சி

பார் உரிமையாளர் மீது கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுநாள் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மல் இவர் அப்பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார் ஆர் எஸ் மடை பகுதியைச் சார்ந்த சிலருக்கும் இவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சமரசம் பேசி அனுப்பி விட்டனர் இந்த முன் பகையின் காரணமாக ஆர் எஸ் மடை பகுதியைச் சார்ந்த சுமார் எட்டு பேர் கொண்ட நபர்கள் நிர்மல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தனர் இந்நிலையில் சம்பவத்தன்று நிர்மலுக்கு போன் செய்து தங்களுக்கு பார்சல் வந்துள்ளது கொரியரில் உடனடியாக வந்த பெற்றுக் கொள்ளுமாறு செல்போனில் பேசி உள்ளனர் இதை நம்பி பார் உரிமையாளர் நிர்மல் நயினார் கோவில் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நிற்கும் பொழுது ஆட்டோவில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர் இது தொடர்பாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாத அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் இவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மதுரை மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் இது தொடர்பாக அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ராஜாஜி தலைமையில் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூறிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி இடம் தெரிவித்தனர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் குற்றவாளிகள் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என எஸ் பி சந்திஸ் தெரிவித்தார் இச்சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Next Story