சோளிங்கரில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு!

X
சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5 கோடியே 54 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் பணியை திட்ட இயக் குனர் ஜெயசுதா ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை குறித்த காலத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் சோளிங்கர் ஒன்றியத் திற்கு உட்பட்ட தலங்கை, கொளத்தேரி, ஒழுகூர், சூரை ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதல்-அமைச்சரின் வீடு கள் மறுகட்டமைப்பு திட்டம், சிறுபாசன ஏரிகள் சீரமைத்தல், 100நாள் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

