ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

X
சோளிங்கர் அருகே வெங்குப்பட்டு பரவத்தூர் கிராமத்தில், போதையில்லா இளைஞர் சமூகம் என்பதை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்குபெற்றன. வெற்றிப்பெற்ற அணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ராமன், மலையமேடு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இரண்டாவது பரிசு வெங்குப்பட்டு எப்.சி.சி. அணியும், 3 அவது பரிசு அம்மையார்குப்பம் தி அன்டர் அணியும், நான்காவது பரிசு சித்தாம்பாடி கிளியர் பாய்ஸ் அணியும், ஐந்தாம் பரிசு அக்கச்சிக்குப்பம் வினோ பிரதர்ஸ் அணியும்பெற்றன.
Next Story

