அரக்கோணத்தில் மண் கடத்திய டிரைவர் கைது

அரக்கோணத்தில் மண் கடத்திய டிரைவர் கைது
X
மண் கடத்திய டிரைவர் கைது
அரக்கோணத்தை அடுத்த அசமந்தூர் பகுதியில் கிராவல் மண் கடத்துவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அசமந்தூர் பகுதியில் உள்ள 8 கண் பாலம் அருகே மண் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் (வயது 25) என்பதும், மண் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விஜயகுமாரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Next Story