பெரம்பலூர் புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்பு

பெரம்பலூர் மக்களுக்கு நேரடியாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது என்னுடைய வேலை! பெரம்பலூர் கலெக்டர் அருண்ராஜ் பேட்டி.
பெரம்பலூர் மக்களுக்கு நேரடியாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது என்னுடைய வேலை! பெரம்பலூர் கலெக்டர் அருண்ராஜ் பேட்டி. பெரம்பலூரில் 17 வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண் ராஜ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பின் தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தை உள்ள வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசின் பிற துறைகளான கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளின் அரசு திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்! அதற்குண்டான நடவடிக்கைகள் அனைத்தும் சீரிய முறையில் வேகமாகவும் எடுப்போம். இந்த மாவட்டம் எனக்கு ஏற்கனவே வரட்சியான மாவட்டம், இதற்கு முன்பு கலெக்டராக செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். அந்த அனுபவத்தில் சிறப்பாக பணியாற்றுள்ளேன். இந்த மாவட்டத்தில் வந்திருக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன் என தெரிவித்தார். போலீஸ் எஸ் பி ஆதர்ஷ் பசேரா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் புதிதாக பதவி ஏற்று கொண்ட கலெக்டருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Next Story