கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தினை ஆய்வு செய்த கலெக்டர்

X
செங்கல்பட்டு மாவட்டம்,கிணாா் ஊராட்சி, மதுராந்தகம் ஏரி உபரிநீா் செல்லும் கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தினை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா நேரில் சென்று ஆய்வு செய்தபோது இங்கு நடைபெறுகின்ற பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதை அறிந்தேன். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரை அழைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும். தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து நல்லாமூா் ஆரம்ப சுகாதார நிலையம், ஒனம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், செயற்பொறியாளா் தணிகாசலம், மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோகுலகண்ணன், பாரதி உடனிருந்தனா்.
Next Story

