நாமக்கல் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு!

17 வது மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி.துர்கா மூர்த்தி அவர்கள் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திருமதி. துர்கா மூர்த்தி இன்று (ஜூன் 27) வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு இதுவரை 16 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பதவி ஏற்றிக்கொண்டு செயல்பாட்டில் இருந்தனர். 17 வது மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி.துர்கா மூர்த்தி அவர்கள் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.* நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த திருமதி.துர்கா மூர்த்திக்கு உயரதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பிறகு, அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு, நாமக்கல் மாவட்டத்தின் - 17வது ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, புதிய ஆட்சியருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Next Story