நியாயவிலைக் கடைகளில் ப்ளூடூத் முறையினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தேனி மாவட்ட தலைவர் அருணகிரி மாவட்ட செயலாளர் காமராஜ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகிய தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் காளிபாண்டியன் செல்லப்பாண்டி மாவட்ட இணை செயலாளர்கள் சரவணன் பாண்டி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் தற்பொழுது ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்துவிட குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை ஆகிறது என்றும் இதனால் ஒரு நாள் ஒன்றுக்கு 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது என்றும் இந்த பிரச்சனை உள்ளதால் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு மோதல் ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகிறது என்றும் இந்த பிரச்சனைகளை தடுத்திடும் வகையில் புளூடூத் முறையினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் சரியான நிலையில் சரியான எடை பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களின் 40 சதவீதம் மகனிடம் அஞ்சு சதவீதம் மாற்றுத்திறனாளிகளும் பணிபுரிகின்றனர் என்றும் இவர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் விற்பனையாளரும் சங்கத்தின் சிற்றெழுத்தாரும் ஒரே நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் சேர்ந்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story

