ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவலாய புனரமைப்பு பணிகள் ஆய்வு

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவலாய புனரமைப்பு பணிகள் ஆய்வு
X
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவலாய புனரமைப்பு பணிகள் ஆய்வு செய்தார்
அரியலூர்,ஜூன் 27:அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை தேவலாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது மற்றும் புனரமைப்புப் பணிகளை ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணிகளுக்கு, நிதி கோரப்பட்டதைத் தொடர்ந்து, அதனை அரசுக்கு பரிந்து செய்வதற்காக, பார்வையிட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர், தேவலாய பழுதுகள் மற்றும் புனரமைக்கும் பணிகளின் விவரங்கள் குறித்தும், அத்தகைய பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்ததுடன், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கான வரைபடத்தினை பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவுத்திட்டம் சமையல் கூடம், ரூ. ரூ.94.6 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாணிக்கராஜ், கோட்டாட்சியர் கோவிந்தராஜ், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை பங்கு தந்தை தங்கசாமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன், பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். படவிளக்கம்: ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவலாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையிலான குழுவினர்.
Next Story