அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், ஜூன் 27- : அரியலூர் நகரப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமான மாவட்ட வருவாய் அலுவலர் மா.ச.கலைவாணியிடம் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், அரியலூர் கடைவீதிகளில் பெரும் நிறுவனங்களும், தரைக் கடைகளும், காந்தி சந்தைப்  பகுதிகளில்  லாரிகளும், செந்துறை சாலைகளில் இரு வாகனங்களும்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலைகள், தெருக்கள் என அனைத்துப்  பகுதிகளும் குறுகளாகியுள்ளன. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லக்கூடிய மாணவ,மாணவிகள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த சாலைகளில் உள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் நகரப் பகுதிகளில் குடிநீருக்காகவும், பாதாள சாக்கடைக்காவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவட மூடப்படமால் கிடப்பதால், சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை போர்க்கால் அடிப்படையில் சீர் செய்யப்படவேண்டும். இடநெருக்கடையில் சிக்கித் தவிக்கும் காந்திச் சந்தையை, வேறு இடத்தில் கட்டடங்களை கட்டி, அங்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் நகர வளர்ச்சிக்கு இங்குள்ள சட்டப் பேரவை, மக்களவை மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி வளர்ச்சிக்கு, நிதியை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story