நாகையில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில்

நாகையில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில்
X
வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில், வெறிநோய் தடுப்பு குறித்து, நாகை பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வெறிநோய் குறித்தும், நாய்களை தடுப்பூசி போட்டு நோய்கள் தாக்காத வகையில் வளர்த்தல், நாய் கடித்தால் வெறிநோய் வராமல் காப்பது எப்படி, நாய்களில் வெறிநோய்க்கான அறிகுறிகளை கண்டறிவது எப்படி எனவும் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் பேசினார். நிகழ்ச்சியில். உதவி இயக்குநர் கணேசன், நாகை கால்நடை மருத்துவர் பாலாஜி, முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் சங்கர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிச்சாமி, சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சின்மயா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story