பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்
X
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாகை அரசு ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ந.செல்வம் தலைமை வசித்தார். மாநில துணை செயலாளர் ந.பாலசுப்பிரமணியன், மாநில ஊடக பிரிவு செயலாளர் ச.சிவ வேலன், மாநில செயற்குழு உறுப்பினர் தி.திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரா.அரசமணி தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை செயலாளராக கீழையூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர் கோ.மணிமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில். தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பெற அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றுகிற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, நாகை ஒன்றிய பொறுப்பாளர் சிவா அசோக் வரவேற்றார். முடிவில், மாவட்ட பொருளாளர் சு.அறிவொளி நன்றி கூறினார்
Next Story